மலையாள திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் பெண்களை நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் பாலியல் ரீதியாகப் பயன்படுத்துவதாக (casting couch) எழுந்த சர்ச்சையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்மந்தமாக ஆய்வு செய்த ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இந்நிலையில்தான் முன்னணி நடிகரான நிவின் பாலி, தன்னை நடிக்க வைப்பதாகக் கூறி வெளிநாட்டில் வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இதற்கு நிவின் பாலி அளித்த பதிலில் “என் மீதானக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. அவை உண்மையில்லை என்று நிரூபிக்க நான் எந்த எல்லைக்கும் செல்வேன். இதற்குப் பின்னால் உள்ளவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவேன். மற்றவை சட்ட ரீதியாகக் கையாளப்படும்” எனக் கூறியுள்ளார்.