மலையாள திரையுலகில் வாய்ப்பு தேடி வரும் பெண்களை நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட பலரும் பாலியல் ரீதியாகப் பயன்படுத்துவதாக (casting couch) எழுந்த சர்ச்சையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் மிகவும் ஆரோக்யமாக செல்லும் மாநிலமாக கேரளா இருந்த நிலையில் இந்த புகார் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனால் மலையாள நடிகர் சங்கமே முழுவதுமாகக் கலைக்கப்பட்டது. இந்நிலையில் சங்கத்தின் முன்னாள் தலைவரும், நடிகருமான மோகன் லால், “குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பார்கள் என்றும் அவர் கூறினார். மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் (அம்மா) தேர்தல் விரைவில் நடைபெறும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது சம்மந்தமாக இளைஞர் ஒருவர் அளித்த புகார் ஒன்றில் நடிகை ரேவதியின் பெயர் இடம்பெற்றதால் சர்ச்சை உருவானது. அதில் “இயக்குனர் ரஞ்சித் என்னை வாய்ப்புக் கொடுப்பதாக ஒரு ஹோட்டலுக்கு அழைத்து என்னை நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்தார். இதுபோன்ற புகைப்படங்கள் ரேவதிக்கு பிடிக்கும் என்று சொல்லி அவருக்கு செல்போனில் அனுப்பினார்” என்று கூறியிருந்தார்.