''மாமன்னன்'' படத்தின் புதிய அப்டேட்...ரசிகர்கள் மகிழ்ச்சி

சனி, 24 ஜூன் 2023 (20:44 IST)
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன் படத்திற்கு இன்று சென்சார் அதிகாரிகள் தணிக்கை சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன்.  இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை இயக்குனர்  மாரி செல்வராஜ் கர்ணன் படத்துக்குப் பிறகு இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் டிரைலர் ரிலீஸ் நடைபெற்றது.

பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படத்திற்கு இன்று தணிக்கை சான்றிதழ்  வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு யு/ ஏ சான்றிதல் வழங்கப்பட்டுள்ளதாக இப்படத்தின் எடிட்டர் செல்வா ஆர்.கே தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு,   இப்படம் வரும் 29 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகும் என்று உறுதி செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

#MAAMANNAN U/A

IN CINEMAS NEAR YOU ON 29th JUNE@mari_selvaraj @Udhaystalin @RedGiantMovies_ @KeerthyOfficial #Vadivelu @arrahman #FahadhFaasil @thenieswar @dhilipaction @kabilanchelliah @kalaignartv_off @MShenbagamoort3 @SonyMusicSouth @NetflixIndia @teamaimpr pic.twitter.com/a1pZY1UHkd

— Selva RK (@EditorSelva) June 24, 2023

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்