விஜய் படத்தில் நடிக்க மறுத்த வடிவேலு… ஏன் என்று அவரே சொன்ன காரணம்!

வியாழன், 22 ஜூன் 2023 (14:30 IST)
தமிழ் சினிமாவின் தனித்துவம் மிக்க நடிகர்களில் இன்றியமையாதவர் வடிவேலு. தனது உடல்மொழியின் மூலம் பல வருடங்களாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளாக அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தாலும், சமூக ஊடகங்களில் மீம்களின் மூலமாக நிறைந்திருக்கிறார்.

ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் தோல்வி அடைந்த நிலையில் முற்றிலும் மாறுபட்ட ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் அவர் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 29 அன்று வெளியாக உள்ள நிலையில் படத்துக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் படத்தின் பிரமோஷனுக்காக அவர் அளித்த ஒரு நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் உதயநிதி ஸ்டாலின் தான் முதன் முதலாக தயாரித்த குருவி திரைப்படத்தில் தன்னை நடிக்க அழைத்ததாகவும், ஆனால் அந்த கதாபாத்திரம் தனக்கு தீனிபோடும் விதமாக இல்லை என்பதால் நடிக்க மறுத்ததாகவும் கூறியுள்ளார். அதன் பின்னர் அந்த படத்தில் விவேக் நகைச்சுவை வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்