டபுள் ஓகே சொன்ன நயன் - விக்னேஷ் சிவன் ஹேப்பியோ ஹேப்பி..!

சனி, 21 செப்டம்பர் 2019 (12:14 IST)
தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்து பலரையும் வெறுப்பேற்றி வருகின்றனர். 


 
விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரௌடி தான்’ படத்தில் நயன்தாரா நடித்தார். பிறகு அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. சில வருடங்கள் ஜோடி புறாக்களாக சுற்றிவந்தனர். அடிக்கடி அவுட்டிங் சென்று இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகி வந்தனர். 
 
ஜோடியாக சேர்ந்து லூட்டியடிக்கும் இந்த காதல் புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருந்து வந்தனர். இதற்கிடையில் விக்னேஷ் சிவன் வீட்டில் விரைவில் திருமணம் செய்துகொள்ள சொல்லி அட்வைஸ் கொடுத்துவந்தனர். ஆனால், நயன்தாரா படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதாக கூறி எஸ்கேஎப் ஆகிவந்தார். இதனால் விக்னேஷ் சிவன் கொஞ்சம் மன வருத்தத்தில் இருந்து வந்ததார். அவரை சமாதானப்படுத்தவதற்காக சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கொடுத்த சூப்பர் சர்ப்ரைஸ் கிப்ட்  "விரைவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி டபுள் ஓகே சொல்லிட்டாராம்" 


 
தற்போது விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறாராம். கூடிய விரைவில் திருமணம் அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்