தமிழில் ஐயா படம் மூலம் அறிமுகமான நயன்தாரா, அதன் பின் சூப்பர் ஸ்டார் ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து முன்னணி நடிகையானார். அதன் பின்னர் சில காதல் சர்ச்சைகளில் சிக்கி தன்னை சுற்றி பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டார். இதே காலத்தில் அவருக்கான மார்க்கெட்டும் பல மடங்கு உயர்ந்தது.
இந்நிலையில் இவர் தமிழில் முதலில் அறிமுகமாக இருந்த படத்தின் வாய்ப்பு பறிபோனது குறித்த செய்தி வெளியாகியுள்ளது. முதலில் சிம்பு நடித்த தொட்டி ஜெயா மற்றும் தனுஷ் நடித்த சுள்ளான் ஆகிய படங்களின் கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அந்த படத்தின் கதாநாயகன்கள் வேண்டாம் என சொல்லியதால் அந்த வாய்ப்புகள் கைநழுவி போனதாம்.