முகேன் ராவ் நடிக்கும் மதில் மேல் காதல்!

வியாழன், 2 டிசம்பர் 2021 (17:05 IST)
பிக்பாஸ் வெற்றியாளர் முகேன் ராவ் நடிக்கும் படத்துக்கு மதில் மேல் காதல் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3ன் வெற்றியாளராக அறியப்பட்டு பிரபலமானவர் முகேன் ராவ். அதையடுத்து அவர் சினிமாவில் வேலன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் இன்னும் ரிலீஸாகாத நிலையில் இப்போது அவர் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

வெப்பம் படத்தின் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கும் மதில் மேல் காதல் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சாக்‌ஷி அகர்வால், அனுஹாசன், கஸ்தூரி, பாண்டியராஜ், சுப்பு பஞ்சு, நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கவுதம் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்