மாஸ்டர் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி இன்று காலை 4 மணிக்காட்சியோடு ரிலீஸாகியுள்ளாது. சமூகவலைதளமெங்கும் மாஸ்டர் கொண்டாட்டமாக இருக்கிறது. சிறப்புக் காட்சி முடிந்து படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதில் முதல் பாதி செம்மயாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி மிகவும் மெதுவாக செல்வதாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.