விஜய் படமான துப்பாக்கியில் இடைவேளைக் காட்சியின் போது வில்லன் போனில் விஜய்யுடன் உரையாடும் போது உன்னைத் தேடி கண்டுபிடித்துக் கொல்வேன் எனக் கூறுவார். அப்போது விஜய் அதற்கு பதிலளிக்கும் விதமாக ஐ ஆம் வெய்ட்டிங் எனக் கூறுவார். அந்த காட்சி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இடையே ரீச் ஆனது. ஆனால் அந்த காட்சியே ஹாலிவுட் படமான டேக்கன் இல் இருந்து உருவப்பட்டது.
ஆனாலும் மாஸான அந்த காட்சியை அதற்கடுத்து வந்த கத்தி மற்றும் சர்கார் ஆகிய படங்களிலும் வைத்தும் சக்கையாக பிழிந்தனர் முருகதாஸும் விஜய்யும். இதையடுத்து இப்போது மாஸ்டர் படத்தில் அந்த காட்சியை உல்டாவாக மாற்றியுள்ளார் லோகேஷ். அதில் விஜய்சேதுபதி இண்டர்வெல் காட்சியில் ஐ அம் வெய்ட்டிங் என சொல்ல பதிலளிக்கும் வெய்ட் பண்ணிட்டுரு… நேர்ல வரண்டா என சொல்வது போல காட்சிப்படுத்தியுள்ளாராம் லோகேஷ். இந்த காட்சி விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகர்கள் இடையே பெரிய அளவில் சென்று சேர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.