இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் பேட்ட. இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா என பிரபலங்கள் ஏராளமானோர் நடித்துள்ளனர்.
எதிர்பார்த்த அளவிற்கு மரணம் மாஸ் பாடல் பூர்த்தி செய்ததா என்றால் இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால் அனிருத் தனது தலைவருக்காக மரண மாஸ் இல்லை அதை விட மரண மாஸாக டியூன் போடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எதிர்பார்ப்பு கண்டமேனிக்கு இருந்ததால் மரண மாஸ் பாடல் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. மேலும் எஸ்.பி.பி.யை ஓரிரு வரியை மட்டும் பாட வைத்துள்ளது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.