சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி உள்ளது என்பதும் இந்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், மனோஜ், டேனியல், பிரேம்ஜி அமரன் உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.