தயாரிப்பாளர் - இயக்குனர் இடையே மோதலால் ‘மாநாடு’ பணிகள் நிறுத்தமா?

வெள்ளி, 30 ஜூலை 2021 (19:34 IST)
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குனர் வெங்கட்பிரபு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ‘மாநாடு’ படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது 
 
‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக படக்குழுவினர் அனைவரும் சம்பளம் குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்படுகிறது 
 
முதல்கட்டமாக இயக்குனர் வெங்கட்பிரபு சம்பளத்தை குறைத்தால் அதை காரணம் காட்டி அனைவரிடமும் சம்பளத்தை குறைக்க தான் வலியுறுத்த உள்ளதாக சுரேஷ் காமாட்சி கூறியுள்ளதாக தெரிகிறது 
 
ஆனால் வெங்கட்பிரபு இதனை ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் இருவருக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து ‘மாநாடு’ படத்தின்  பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
ஆனால் இந்த தகவலை வெங்கட்பிரபு தனது டுவிட்டரில் மறுத்துள்ளார். ‘மாநாடு’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் தயவுசெய்து யாரும் இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்