மாமனிதன் படத்துக்கு மேலும் ஒரு சர்வதேச விருது… இயக்குனர் சீனு ராமசாமி நெகிழ்ச்சி!

வியாழன், 2 மார்ச் 2023 (08:58 IST)
சீனுராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணியில் தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து மாமனிதன் படம் உருவாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டே முடிந்தது. ஆனால் இரண்டு ஆண்டு தாமதத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. ஆனால் திரையரங்கில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து ரிலீஸுக்குப் பிறகு பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறது. சமீபத்தில் ரஷ்ய நாட்டில் திரைப்பட விழாவில் கலந்துகொள்ள தேர்வாகி விருதை வென்றது.

இதையடுத்து இப்போது அமெரிக்காவின் செடோனா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு உத்வேகம் தரும் படம் என்ற விருதை வென்றுள்ளது. இந்த விருதைப் பெற்றுக்கொண்ட இயக்குனர் சீனு ராமசாமி “விருதை மறைந்த இயக்குனர் சத்யஜித் ராய்க்கு அர்ப்பணிப்பதாக” தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்