ஆனால் பத்திரிக்கையளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்குல் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு சென்று, விடுதலை செயப்பட்டபின் அவரின் மார்க்கெட் சரிய தொடங்கியது. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைய, தன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்த நிலைக்கு சென்றார். 1959 ஆம் ஆண்டு அவர் நோய்வாய் பட்டு இறந்தார்.
அவருக்கு ரவீந்தரன் என்ற மகனும் சரோஜா மற்றும் சுசீலா என்ற மகள்களும் இருந்தனர். இவர்களில் ரவீந்தரன் மற்றும் சரோஜா ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் இப்போது சுசீலா மறைந்துள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக அவர் நேற்று முன்தினம் இறந்துள்ளார். அவருக்கு வயது 89. சென்னை வில்லிவாக்கத்தில் அவர் இல்லத்தில் அவர் உயிர் பிரிந்துள்ளது.