கே ஜி எப்… 2 புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

சனி, 8 ஜனவரி 2022 (15:22 IST)
யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎப் 2 படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ரிலிஸ் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் கதாநாயகன் யஷின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்