ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த காதல் படமான பியார் பிரேமா காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை யுவன் தயாரிக்க புதுமுக இயக்குனர் இளன் இயக்கி இருந்தார். மீண்டும் யுவன் , ஹரிஷ் கல்யாண் மற்றும் இளன் கூட்டணியில் ஸ்டார் என்ற படம் அறிவிக்கப்பட்டு அதன் சில போஸ்டர்களும் வெளியாகின. ஆனால் இந்த படம் சிலபல காரணங்களால் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை.
இந்த படத்தில் ஆதிதி பொஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.