சென்னை அடையாறு கிரவுன் பிளாசா 5 ஸ்டார் ஹோட்டலுக்கு மூடுவிழா.. என்னவாக மாறப்போகுது?

புதன், 22 நவம்பர் 2023 (11:23 IST)
சென்னை அடையாறு பகுதியில் இருந்த கம்பீரமான கிரவுன் பிளாசா மூடப்பட உள்ளதாகவும், இதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.  

சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலாக கிரவுன் பிளாசா.  கடந்த 2015 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஒரு நாள் தங்குவதற்கு ரூபாய் 10,000 முதல் 17,000 வரை வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த ஓட்டல் டிசம்பர் 20 தேதிக்கு பின்னர் மூடப்பட இருப்பதாகவும் அதுவரை வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் சேவை செய்யப்படும் என்றும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது

சென்னையின் பழமையான கட்டிடங்களில் ஒன்றான கிரவுன் பிளாசாவை தற்போது ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டு விட்டதாகவும் அதில்  அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டா போவதாகவும் கூறப்படுகிறது.

130 அடுக்குமாடி வீடுகள் இந்த இடத்தில் கட்டப்படவுள்ளதாகவும் கட்டி முடித்தவுடன் ஒரு வீடு 15 முதல் 20 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது.  

சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படும் நிலையில், கிரவுன் பிளாசா மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதன் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்