கன்னட நடிகர் நடித்துள்ள சார்லி 777 என்ற திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் தமிழ் நடிகர் பாபி சிம்ஹாவும் நடித்துள்ளதால் தமிழிலும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் உரிமையை இயக்குனரும் பாபியின் நண்பருமான கார்த்திக் சுப்பராஜ் வாங்கி வெளியிட இருக்கிறார். மலையாளத்தில் இந்த படத்தின் உரிமை நடிகர் பிருத்விராஜால் வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.