ஆஸ்திரேலிய அணிக்கு உன் நிறம் பொருந்தாது… உஸ்மான் கவாஜா பகிர்ந்த தகவல்!

சனி, 5 ஜூன் 2021 (08:32 IST)
ஆஸி அணியின் முன்னணி வீரராக இருக்கும் உஸ்மான் கவாஜா தான் எதிர்கொண்ட நிறவெறியை பற்றி பேசியுள்ளார்.

ஆஸி அணியில் இடம்பெற்றிருக்கும் உஸ்மான் கவாஜா பாகிஸ்தானில் பிறந்து ஆஸ்திரேலியாவில் குடியேறி அந்த நாட்டுக்கான கிரிக்கெட் அணியிலும் இணைந்து விளையாடி வருகிறார். ஆனால் இப்போது தான் அணியில் இடம்பெற்ற போது எதிர்கொண்ட நிற ரீதியிலான பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார்.

அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘அப்போதெல்லாம் நான் அணியில் இடம்பிடிக்க முயன்ற போது உன் நிறம் ஆஸி அணிக்கு பொருந்தாது எனக் கூறினர். இதையே எத்தனை முறை எத்தனை பேர் என்னிடம் கூறி இருப்பார்கள் தெரியுமா.  ஆனால் இப்போது நிலைமை மாறி இருக்கிறது. இப்போது ஆஸியில் உள்ள துணைக்கண்ட வம்சாவளி நபர்கள் என்னைப் பார்க்கும் போது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர். ’ எனக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்