இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா விஜயகாந்த் உடனான நட்பு குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த உடன் நான் வந்து சேரட்டுமா எனக் கேட்டேன். ஆனால் அவர் என்னை வேண்டாம் எனத் தடுத்தார். உனக்கு என்ன பிரச்சனை என்றாலும் என்னிடம் வா. ஆனால் கட்சிக்கு எல்லாம் வராதே. அதனால் உன் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படலாம். அவர் மட்டும் உடல்நிலை சரியாக இருந்தால் இப்போது அவர்தான் முதலமைச்சர் வேட்பாளராக இருந்திருப்பார். எனக் கூறி என்மீது அக்கறையாக பேசினார்.