தமிழ் சினிமாவில் அலைபாயுதே படத்தின் மூலம் அமெரிக்க மாப்பிள்ளையாக அறிமுகமானார் கார்த்திக் குமார். அதன் பின்னர் பல படங்களில் அதே போன்ற கதாபாத்திரங்களில் நடித்தார். சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். ஆனாலும் அவரால் பெரிய நட்சத்திரமாக வர முடியவில்லை. அதனால் நடிப்பை விட்டு விலகி ஸ்டாண்ட் அப் காமெடி பக்கம் ஒதுங்கி அங்கு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் “இது கொஞ்சம் சர்ச்சையை உருவாக்கலாம். இப்போது வரும் எல்லா மாஸ் ஹீரோ பட டிரைலர்களும் ஒரே மாதிரியாகதான் இருக்கின்றன. அவன் வரப்போறான், அவர் வந்துட்டான், அவன் செய்யப் போகிறான், அவன் அடிக்க போறான், என்று தான் கிட்டத்தட்ட எல்லா மாஸ் நடிகர் படங்களின் டிரைலரில் உள்ளது. இதுபோன்ற ஒரே மாதிரியான டிரைலரைப் பார்க்கும் மக்கள் வித்தியாசமானதைப் பார்த்ததை போல ஆச்சர்யப்படுகிறார்கள்” எனக் கூறியிருந்தார்.