இன்னும் தீராத கெட்டப் ஆசை… வீர தீர சூரன் படத்தில் விக்ரம்முக்கு எத்தனை லுக்!

vinoth

திங்கள், 29 ஏப்ரல் 2024 (07:33 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம்மின் சமீபகாலமாக படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள தங்கலான் படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கடுத்து விக்ரம், சமீபத்தில் சித்தா என்ற முக்கியமானப் படத்தைக் கொடுத்த இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சிபு தமீம்ஸ் தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க துஷாரா விஜயன், எஸ் ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வெளியாகி கவனம் பெற்றது. மேலும் படத்தின் தலைப்பு ‘வீர தீர சூரன்’ எனவும் அறிவிக்கப்பட்டு படம் இரண்டு பாகங்களாக உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் தென் தமிழகத்தில் தொடங்கியது. இந்நிலையில் இந்த படத்தில் விக்ரம் மூன்று விதமான கெட்டப்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபகாலமாக  விக்ரம் தான் நடிக்கும் படங்களில் எல்லாம் விதவிதமான கெட்டப்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை. அதனால் கதையைக் கேட்காமல் எத்தனை கெட்டப் என்றுதான் விக்ரம் கேட்பாரோ என்று அவர் மீது ஒரு விமர்சனமும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்