முத்தக் காட்சிக்கு No சொன்னதால் பல படங்களை இழந்துள்ளேன்… நடிகை மிருனாள் தாக்கூர்!

vinoth

ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (15:20 IST)
பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் சீதாராமம் திரைப்படம்  மூலமாக தென்னிந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். தெலுங்கில் உருவான அந்த திரைப்படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஹிட் ஆகி ஆகியதால் ஒரே படத்தில் தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆனார்.

இதையடுத்து இப்போது அவர் நானியோடு நடித்த ஹாய் நானா படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. சமிபத்தில் இவர் நடித்த பேமிலி ஸ்டார் திரைப்படம் வெளியாகி அட்டர் ப்ளாப் ஆனது. இப்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் தான் முத்தக் காட்சி மற்றும் நெருக்கமான ரொமாண்டிக் காட்சிகளில் நடிக்க முடியாது என சொன்னதால் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளேன் எனக் கூறியுள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர் “நான் நெருக்கமான காட்சிகளில் நடிக்க பயப்படுவேன். அதனால் பல வாய்ப்புகளை இழந்துள்ளேன். ஆனால் இன்னும் எத்தனை காலம் அப்படியெல்லாம் சொல்ல முடியும் என தெரியவில்லை. என் பெற்றோருக்கும் நான் அப்படிப்பட்ட காட்சிகளில் நடிப்பது பிடிப்பதில்லை. என் பெற்றோரோடு சேர்ந்து நான் படம் பார்க்கும் போது அதுபோன்ற காட்சிகள் வந்தால் தர்ம சங்கடமாகிவிடுகிறது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்