கார்த்தி முத்தையா படம் தொடங்குவது எப்போது?

திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (16:43 IST)
முத்தையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கார்த்தி ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் அந்த படம் தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.     
     

சசிக்குமார் நடித்த குட்டிப் புலி மற்றும்  கார்த்தி நடித்த கொம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் கௌதம் கார்த்தியை வைத்து இயக்கிய தேவராட்டம் திரைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தி வெற்றி பெற்றது. அதன் பின்னர் விக்ரம் பிரபு மற்றும் லஷ்மி மேனன் ஆகியவர்களை வைத்து உருவாக்கிய புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியானது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் முத்தையா கார்த்திக்கு ஒரு கதை சொல்லி அவரின் சம்மதம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் ஏற்கனவே அவர்கள் கூட்டணியில் உருவாகி வெற்றி பெற்ற கொம்பன் படத்தின் இரண்டாம் பாகம் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்தின் தொடக்கப்பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இப்போது அதுபற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தை முடித்த பின்னர் அந்த படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்