யார் சொன்னது காலா படம் ஃபெய்லியர்ன்னு? எகிறும் தனுஷ்

ஞாயிறு, 8 ஜூலை 2018 (11:38 IST)
காலா படம் நல்ல லாபத்தை தந்துள்ளது என அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான காலா திரைப்படம் ஒரு தோல்விப்படம் என சிலரும், இல்லை இது வெற்றிப்படமே என சிலரும் கூறி வந்தனர். 
 
இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் டிஸ்ட்ரிபியூஷன் முறையில்தான் வினியோகஸ்தர்களிடம் கொடுத்துள்ளார். தமிழ்நாடு தியேட்டர்களில் உரிமை மட்டும் ரூ.62 கோடிக்கு விற்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறாததால், படத்தை வாங்கியவர்கள், நஷ்டத்தை ஏற்கும்படி தனுஷிடம் வலியுறுத்தியதாகவும், இதனால் அவர் ரூ.40 கோடி நஷ்டத்தை ஏற்றுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியானது.
இதுகுறித்து பேசிய தனுஷ், காலா படம் குறித்து பரவும் வதந்திகள் அனைத்தும் பொய் என்றும், காலா படம் எங்களுக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தனுஷ் தனது வுண்டர்பார் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்