இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான் காலா படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படம் வெளியாக 3வது நாளிலேயே பல தியேட்டர்கள் காத்து வாங்கியது. எனவே, இப்படம் ஒரு தோல்விப்படம் என சிலரும், இல்லை இது வெற்றிப்படமே என சிலரும் கருத்து கூறி வந்தனர்.
இப்படத்தை தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் டிஸ்ட்ரிபியூஷன் முறையில்தான் வினியோகஸ்தர்களிடம் கொடுத்துள்ளார். தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமை மட்டும் ரூ.62 கோடிக்கு விற்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறாததால், படத்தை வாங்கியவர்கள், நஷ்டத்தை ஏற்கும்படி தனுஷிடம் வலியுறுத்தியுள்ளனர். எனவே, ரூ.40 கோடி நஷ்டத்தை அவர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.