வாட்ச்மேன், குப்பத்து ராஜா, ஜெயில், சிவப்பு மஞ்சள் பச்சை, 4ஜி என நடிகர் பிரகாஷ் ராஜ் செம பிஸி. அதேபோல், அசுரன், சுதா கொங்கரா இயக்கும் சூர்யா படம் என இரண்டு படங்கள் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கையில் இருக்கின்றன. இப்படி தமிழ் சினிமாவில் பிஸியோ பிஸியாக வேலைபார்த்துக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ், பொதுவான சமூக பிரச்னைகள் குறித்து அவ்வப்போது குரல் எழுப்பவும் தவறுவதில்லை.
இந்தநிலையில் தேர்தல் குறித்த கேள்விக்கு அவர் சற்று காட்டமாகவே பதில் சொல்லியிருக்கிறார். அவர் கூறுகையில், `முதலில் தேர்தல் வந்தவுடன், திரையுலகைச் சேர்ந்தவர்களிடம் அரசு குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்பதே தவறு என நினைக்கிறேன். எல்லா விஷயங்களும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் கருத்துச் சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. ஏழு பேர் விடுதலை, பொள்ளாச்சி சம்பவம் போன்ற பெரிய விஷயங்களுக்கு உடனுக்குடன் பதில் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். என்ன நடக்கிறது, யாருக்கு வாக்களித்தால் நல்லது என்று மக்களுக்குத் தெரியும். அது அவர்களுடைய விருப்பம். அந்த விருப்பத்தில் நான் தலையிடுவதில்லை என்று ஜி.வி.பிரகாஷ்குமார் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.