ஏற்கனவே விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தந்தையாக சரத்குமார் நடிகை இருக்கும் நிலையில் பிரபு, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா ஆகியோர் இந்த படத்தில் இணைந்தனர் என்பதை பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி ஸ்ரீகாந்த், ஷாம் மற்றும் சங்கீதா ஆகிய மூவரும் இணைந்து உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.மேலும், சம்யுக்தா, யோகிபாபு உள்ளிட்டோர் இப்படத்தில் இணைந்துள்ள படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடலைப் போன்று தளபதி66 படத்திலும் ஒருபாடல் இடம்பெறுகிறது. இதிலும், விஜய்யின் நடனம் சிறப்பாக இருக்கும் எனவும் அதற்கேற்ப இசையமைப்பாளர் தமன் சூப்பர் பாடல் உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.