நடிகைகளிடம் வேறுபாடு பார்ப்பதில்லை- அமிர்தா ஐயர்

ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (17:02 IST)
தமிழ் சினிமாவில் நடிகைகளிடம் வேறுபாடு பார்ப்பதில்லை என்று அமிர்தா ஐயர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகை அமிர்தா ஐயர். இவர், விஜய்யுடன் பிகில், படைவீரர், லிப்ட், காபி வித் காதல், வணக்கம்டா மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

இன்று கோவை மாவட்ட்டம் பி.என். புதூரில்  நடந்த   நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போது நான் அனுமன் என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறேன். தமிழ் சினிமாவில் நடிகைகளிடம் வேறுபாடு பார்ப்பதில்லை. திறமையுள்ள நடிகைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்