கமலுக்காக காத்திருக்கும் வினோத்.. அவருக்காக காத்திருக்கும் தனுஷ்!

சனி, 4 பிப்ரவரி 2023 (15:19 IST)
இயக்குனர் வினோத் அடுத்து கமல்ஹாசனை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஹெச் வினோத் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடித்த துணிவு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்துக்குப் பிறகு அவர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முன்பாக அவர் யோகி பாபு நடிப்பில் ஒரு சிறு பட்ஜெட் படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இவை இரண்டும் இல்லாமல் தனுஷ் நடிப்பிலும் ஒரு படத்தையும் இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கமல் இந்தியன் 2 திரைப்படத்தை முடித்ததும் அடுத்து உடனடியாக வினோத் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது கமல்ஹாசனின் சம்மதத்துக்காக ஹெச் வினோத் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் கமலிடம் இருந்து முடிவு வந்ததும், முதலில் கமல் படத்தை இயக்குவதா அல்லது தனுஷ் படத்தை இயக்குவதா என்ற முடிவில் இருக்கிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்