விஜய்யின் ‘’தீ தளபதி பாடல்’’ வீடியோ ரிலீஸ்

ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (16:48 IST)
நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெற்ற தீ தளபதி பாடல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர்   நடிப்பில், வம்சி இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு ரிலீஸான படம் வாரிசு. இப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் தமன் இசையில் இடம்பெற்ற ரஞ்சிதமே,  தீ தளபதி, ஃபோல் ஆப் வாரிசு என்ற அம்மா பாடல் உள்ளிட்டவை பெரும் வெற்றி பெற்றன.

இந்த நிலையில், இன்று தீ தளபதி பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இது வைரலாகி வருகிறது.

தீ தளபதி பாடல் வரிகளை  பாடலாசிரியர் விவேக் இயற்றியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்