தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராக வலம் வருபவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் நடித்த முதல் படமான மீசைய முறுக்கு படத்தை இவரே இயக்கி, நடித்தும் இருந்தார். அதன்பின்னர் பல படங்களில் நடித்தவர் நீண்ட காலம் படம் நடிக்காமல் இருந்து, பின்னர் சமீபத்தில் பிடி சார் என்ற அவருடைய படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஆதி, “இதுவரை நான் சினிமாவில் சம்பாதித்த அனைத்தையும் போட்டு இந்த படத்தை எடுத்துள்ளேன். இந்த படத்தில் இருந்து லாபம் கிடைத்தால் மீண்டும் அதை வைத்து படம் எடுப்பேன். ஏனென்றால் என்னுடைய ஃபார்மட்டை உடைத்து இந்த படத்தை எடுத்துள்ளேன். கொஞ்சம் ரிஸ்க் ஆன படம்.” எனக் கூறியுள்ளார்.