என்னைப் பத்தி முழுசா தெரிஞ்சா மாப்பிள்ளை அப்படிக் கேக்க மாட்டாங்க – மெய்யழகன் மேடையைக் கலகலப்பாக்கிய அரவிந்த் சுவாமி!

vinoth

திங்கள், 16 செப்டம்பர் 2024 (08:13 IST)
96 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் தற்போது கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.  படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் ராஜ்கிரண் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள், கிளர்வோட்டம்(டீசர்) எல்லாம் மிக வித்தியாசமாக அமைந்தததால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமல் மெல்லிய உணர்வு கொண்ட குடும்ப உறவுகள் பற்றிய படமாக இருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் மெய்யழகன் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அரவிந்த் சுவாமியிடம் தொகுப்பாளினி “சார் இன்னும் கூட உங்களப் போலதான் மாப்பிள்ளை வேணும்னு பொண்ணுங்க கேக்குறாங்க” எனக் கேட்டார். அதற்கு அரவிந்த் சுவாமி “என்னை பத்தி முழுசா தெரிஞ்சா அப்படி யாருமே கேக்க மாட்டாங்க. நான் ஆரம்பத்தில் பண்ணிய சில கதாபாத்திரங்களைப் பார்த்துவிட்டு நிஜ வாழ்விலும் அப்படிதான் இருப்பேன் என நினைத்து அப்படிக் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்” என ஜாலியாக பதிலளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்