தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்குப் பிறந்தநாள்… நடிகை குஷ்பு வாழ்த்து

சனி, 29 ஆகஸ்ட் 2020 (16:33 IST)
தெலுங்கு சினிமா என்றழைக்கபடும் டோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் அக்கினேனி நாகார்ஜூனா.

இவர் கடந்த 1986 ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகம் ஆனார்.  இவர் அன்னமய்யா, கம்ஸ்யா, சந்தோஷம், சுவர்ணா, ச்ஸ்ரீ ராமதாஸு உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்து நந்தி விருதுகள் பெற்றுள்ளார்.

தமிழிவில் பிரவீன்காந்த் இயக்கத்தில் வெளியான ரட்சகன் படத்தில் இவர் ஹீரோவாக நடித்தார். பின்னர் கார்த்தியுன் இணைந்து தோழா என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கோலோட்சிய குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் நாகார்ஜூனாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.  அத்துடன் அவரது ரசிகர்கள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இவரது மருமகள் சமந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்