இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒருப் படம் முழுவதும் முடிக்கப்பட்டு ரிலிஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு பின்னர் தயாரிப்பாளர்களுக்குப் பிடிக்காததால் கிடப்பில் போடப்பட்டது என்றால் அது பாலா இயக்கிய வர்மா படமாகத்தான் இருக்கும். அதன் பின்னர் இப்போது மீண்டும் ஆதித்ய வர்மா என்ற பெயரில் படம் மீண்டும் தொடங்கியுள்ளது.
புதிய வெர்ஷனை இயக்குவதற்காக துருவ் விக்ரம் தவிர்த்த மற்ற அனைத்து நடிகர் நடிகைகள் தேர்வு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று முடிந்துள்ளது. இப்போது வர்மாவின் ஒளிப்பதிவாளராக பாலிவுட் புகழ் ரவி கே சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார். கதாநாயகியாக நடிகை பனிதா சந்தூ கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வெர்ஷனை இயக்குவதற்கு தெலுங்கு அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் வங்காவின் உதவியாளர் கிரி சாயா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.