அதர்வா, ஆர்ஜே பாலாஜியின் தேசமே கண் முழிச்சுக்கோ - 'பூமராங்' பாடல் வீடியோ

வியாழன், 14 மார்ச் 2019 (10:56 IST)
அதர்வா, மேகா ஆகாஷ், ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் மார்ச் 8 ம் தேதி வெளியான படம்  'பூமராங்'. 'ஜெயம்கொண்டான்', 'இவன் தந்திரன்' ஆகிய படங்களை இயக்கிய  ஆர்.கண்ணன்  'பூமராங்'. படத்தை இயக்கியுள்ளார். 


 
பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு ரதன் இசையமைத்துள்ளார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பூமராங் படத்தில் இருந்து 'தேசமே முழிச்சுக்கோ' என்ற பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை விவேக் எழுத, ஜிதின் ராஜ் பாடியுள்ளார்.
 
அதர்வா தற்போது குருதி ஆட்டம் என்ற படத்தில் நடித்துவருகிறார்.  '8 தோட்டாக்கள்' படத்தை இயக்கிய இயக்குநர் ஸ்ரீகணேஷ் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்