தென்னிந்திய திரையிசைப் பாடகரும், நடிகருமான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஒரு பாடகராக மட்டுமில்லாது இசையமைப்பாளர், நடிகர், பட தயாரிப்பாளர், டப்பிங் என பல வேலைகளை சினிமாவில் செய்திருப்பவர். அவரின் தாயார் சகுந்தலம்மா இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 89.
இதில் சோகமான விஷயம் என்னவென்றால் , மகன் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இசைக் கச்சேரிக்காக வெளிநாடு சென்றுள்ளார். தற்போது அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் நாடு திரும்பிக்கொண்டிருக்கிறார். ஆகவே இறுதிச்சடங்கு கொஞ்சம் தாமதமாகும் எந்திரிக்கின்றனர் உறவினர்கள்.
நெல்லூரில் வைக்கப்பட்டுள்ள சகுந்தலம்மா உடலுக்கு குடும்ப உறவினர்கள், திரைத்துறையினர், நண்பர்கள் எனப் பலரும் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.