நிதிமோசடி வழக்கு தொடர்பாக மேற்குவங்க காவல்துறை ஆணையரை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகளுக்கும் மேற்குவங்க காவல்துறைக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. இதனால் போலீஸார் சிபிஐ அதிகாரிகளை கைது செய்து பின்னர் விடுவித்தனர். இதனை எதிர்த்து சிபிஐ அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். போதிய ஆவணங்கள் இருந்தும் எங்களை பணி செய்ய விடமாட்டிங்கிறார்கள் என தெரிவித்திருக்கின்றனர்.
இதற்கிடையே சிபிஐய்யின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய பாஜக அரசு வேண்டுமென்றே தேர்தல் நேரத்தில் தனது ஆட்சி அதிகாரத்தை உபயோகித்து வரம்பை மீறுகிறது என கூறி மேற்கு வங்க முதலமைச்சர் 2 நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரின் போராட்டத்திற்கு நாடெங்க்லிருந்தும் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், மம்தா பானர்ஜி சிபிஐ நடத்திவரும் நிதி நிறுவன மோசடி விசாரணையை தடுக்க நினைப்பது சீப்ப ஒளிச்சுட்டா கல்யாணம் நின்னுடும் காமெடி போல் உள்ளது. உண்மை விரைவில் வெளியே வரும் என அவர் கூறினார்.