தென்னிந்தியாவைத் தாண்டி பாலிவுட்டுக்கு செல்லும் ஃபஹத் பாசில்… இம்தியாஸ் அலி இயக்கத்தில் முதல் படம்!

vinoth

வெள்ளி, 6 டிசம்பர் 2024 (08:03 IST)
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாள மொழி தாண்டியும் ரசிகர்கள் ஏராளம். அவரின் படங்கள் தமிழகத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்திருந்த விக்ரம் மற்றும் புஷ்பா அகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன.

சமீபத்தில் அவர் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய ஆவேஷம் திரைப்படம் பிளாக்பஸ்டராகி 150 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது.  நேற்று ரிலீஸான புஷ்பா 2 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் செய்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் அறியப்படும் நடிகராக இருக்கும் ஃபஹத் அடுத்து ஒரு நேரடி இந்தி படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ராக்ஸ்டார் உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான இம்தியாஸ் அலி இயக்கும் புதிய காதல் படத்தில் பஹத் பாசில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.. இந்த படத்துக்கு ஏ அர் ரஹ்மான் இசையமைக்க, கதாநாயகியாக திரிப்தி டிம்ரி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்