லொள்ளு சபா மூலமாக தமிழ் படங்களை ஓட்டி ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர் இயக்குனர் ராம்பாலா. பின்னர் சந்தானத்தை வைத்து தில்லுக்கு துட்டு1 மற்றும் 2 ஆகிய படங்களை இயக்கி தன்னை ஒரு சினிமா இயக்குனராகவும் நிருபித்தார். இதையடுத்து அவர் இப்போது அகில உலக சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் தமிழ்ப்படம் சிவாவை வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்த படமும் கலகலப்பான பேய்க் காமெடி படம் என சொல்லப்படுகிறது. இடியட் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
அப்போது பேசிய இயக்குனர் ராம்பாலா மக்கள் ரசிக்கும் வகையில் நகைச்சுவை படங்களை இயக்கும் இயக்குனர்களுக்கு மத்திய அரசு விருது அளிக்க வேண்டும். கருத்து சொல்லும், கத்தி எடுத்துக்கொண்டு அலையும் இயக்குனர்களுக்கு அங்கிகாரம் கிடைக்கிறது. நகைச்சுவை என்பது மிகக்கடினம். அந்த வேலையைதான் நாங்கள் செய்து வருகிறோம். அங்கிகாரம் கிடைக்காததால் சம்பளம் சில லட்சங்களை தாண்டுவதில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.