டிக்கிலோனா படத்துக்கு திரை ஒதுக்க மறுத்த தியேட்டர்… ஏன் தெரியுமா?

வியாழன், 2 செப்டம்பர் 2021 (10:30 IST)
நடிகர் சந்தானம் நடித்துள்ள டிக்கிலோனா படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தானம் நடித்து வந்த ’டிக்கிலோனா’ என்ற படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகக் காத்திருந்தது. இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றிருந்ததால் ஓடிடி நிறுவனங்கள் வாங்க முன்வந்தன. அதற்காக ஒரு பெரும் தொகையைக் கொடுக்கவும் தயாராக இருந்தனர்.

ஆனால்  தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷ் இந்த படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தார். ஆனால் அதற்கு கொரோனா வழிவிடவில்லை, இந்நிலையில் இப்போது இந்த படத்தை ஜி 5 ஓடிடி தளத்தில் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதனால் படத்துக்கான ப்ரமோஷன் பணிகளுக்காக சினிமா உலகினரை சேர்ந்தவர்களுக்கு படத்தை திரையிட சென்னையின் முக்கிய தியேட்டரை தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷ் அனுகியுள்ளார். ஆனால் படம் ஓடிடியில் ரிலிஸாவதால் அதற்கு திரையரங்க நிர்வாகம் மறுத்ததாம். பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகே திரையரங்க நிர்வாகம் ஒத்துக் கொண்டதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்