தனுஷ் பகிர்ந்த ஆயிரத்தில் ஒருவன் பேன்மேட் போஸ்டர்!

சனி, 2 ஜனவரி 2021 (17:06 IST)
நடிகர் தனுஷ் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்த ஃபேன் மேட் போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான செல்வராகவன் கார்த்தி இயக்கத்தில் உருவாக்கிய சாகச திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்ம். அந்த படம் ரிலீஸின் போது பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் இப்போதுவரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிரது. இந்நிலையில்  செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தின்  இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக தகவ தெரிவித்து, இதன் போஸ்டரை இன்று புத்தாண்டுப் பரிசாகத் தன் ரசிகர்களுக்கு விருந்துவைத்தார். ஆனால் இப்படத்தின் போஸ்டர் காப்பியடிக்கப்பட்டது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து இப்போது அந்த படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படும் தனுஷ் அவர் இடம்பெற்றிருக்கும் ஆயிரத்தில் ஒருவன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் ஒருவர் உருவாக்கி பகிர்ந்த அந்த போஸ்டரைப் பகிர்ந்த தனுஷ் வாவ் என் ஆச்சர்யமடைந்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்