தனுஷ் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகிய ‘கர்ணன்’ திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகும் என கடந்த 2 நாட்களுக்கு முன்னரே இயக்குனர் மாரி செல்வராஜ் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் தனுஷின் பிறந்த நாளாகிய இன்று சற்று முன்னர் ’கர்ணன்’ படத்தின் டைட்டில் போஸ்டர் அட்டகாசமாக வெளிவந்துள்ளது. சூரியனை நோக்கி பாயும் ஒரு வாளை பலர் ஒன்று சேர்ந்து பிடித்து உள்ளது போல் இந்த டைட்டில் போஸ்டர் உள்ளது. மேலும் இந்த டைட்டில் போஸ்டரில் ”நீதி சூரியனை போல முளைத்தெழக்கூடியது” என்று இயக்குனர் மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார். இதனால் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது