எத்தனை முறை அபார்ஷன் நடந்தது? சுசிலீக்ஸ் குறித்த கேள்விக்கு சின்மயி பதில்

திங்கள், 15 அக்டோபர் 2018 (08:26 IST)
கடந்த சில நாட்களாக கவிஞர் வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கள் ஒருபக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தாலும், சுசிலீக்ஸில் வெளிவந்த ஒருசில தகவல்கள் குறித்து சின்மயி மீது ஒருசிலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதில் ஒன்று சின்மயிக்கு நான்கு முறை அபார்ஷன் நடந்ததாகவும், அது எந்த அளவுக்கு உண்மை என்றும் பலர் கேள்வி எழுப்பினர்

இதுகுறித்து வீடியோ ஒன்றின் மூலம் பதிலளித்துள்ள சின்மயி, 'கடந்த ஒன்றரை வருடங்களாக சுசிலீக்ஸில் வந்த ஒரு கருத்து குறித்து தமிழில் உள்ள கொச்சையான அனைத்து வார்த்தைகள் மூலம் ஒருசில தமிழ் உள்ளங்கள் என்னிடம் கேள்வி கேட்டு வருகின்றனர். குறிப்பாக என் கேரியரை மேம்படுத்த நான் செய்த அட்ஜெஸ்ட்மெண்டுக்கள் என்னென்ன? எனக்கு நான்கு முறை அபார்ஷன் நடந்தது உண்மையா? என கேள்வி கேட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு இப்போது நான் பதில் கூறுகின்றேன். சுசிலீக்ஸில் இந்த விஷயம் வந்தபோது அப்போதே இந்த குற்றச்சாட்டை நான் மறுத்திருந்தேன். அதுமட்டுமின்றி சுசித்ரா கூறிய இந்த விஷயத்தில் உண்மையில்லை என்றும் அவர் மனநிலை சரியில்லாத நேரத்தில் கூறிய குற்றச்சாட்டுக்கள் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி இதுகுறித்து வருத்தம் தெரிவித்து சுசித்ராவின் கணவர் கார்த்திக் எனக்கு ஒரு இமெயிலும் அனுப்பியிருந்தார். அந்த மெயிலை நான் வெளியிட எனக்கு இரண்டு நிமிடங்கள் ஆகியிருக்காது. ஆனால் நான் அதை விரும்பவில்லை. இப்போதும் கார்த்திக் தனது டுவிட்டில் 'சின்மயி மீது சுசித்ரா கூறிய குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று கூறியுள்ளார். உண்மை ஒருநாள் வெளியே வரும் என்ற எனது நம்பிக்கை வீண்போகவில்லை. மொத்ததில் கேள்வி கேட்ட தமிழ் உள்ளங்கள் அனைவருக்கும் கார்த்திக்கின் டுவிட்டே பதிலாக உள்ளது' என்று சின்மயி கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்