ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது என்பதும், சமீபத்தில் கூட இலங்கையில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது தெரிந்தது.
இந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தலைமறைவாகியுள்ள நிலையில், இந்த படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அமலாக்கத்துறை ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் அவருடைய நண்பர் ரதீஷ் ஆகிய இருவரையும் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்த இட்லி கடை படத்தின் பணிகளும் நிறுத்தப்பட்டு இருந்தாலும், தனுஷூக்கு இதனால் எந்த விதமான பிரச்சினையும் இல்லை. ஏனெனில், அவர் சம்பளமாக 40 கோடி ரூபாய் வாங்கி உள்ளார். ஆனால், சிவகார்த்திகேயனைப் பொறுத்தவரை, பராசக்தி படத்தில் சம்பளம் மற்றும் வேறு சில கமிட்டும் மட்டும் இருப்பதாக கூறப்படுவதால், சிவகார்த்திகேயனுக்கு கூடுதல் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் தனுஷ் பரப்பு மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும், ஒரு வதந்தி பரவுகிறது. பராசக்தி படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் தனுஷ் தான் என்றும், ஆனால் சில மாதங்கள் காத்திருக்கும் படி சுதா கொங்கராவிடம் அவர் கூறிய போது, தன்னால் காத்திருக்க முடியாது என்று கூறிய அவர் சிவகார்த்திகேயனை வைத்து இந்த படத்தை எடுத்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
எனவே, இந்த படம் தன்னை விட்டு பறிபோனது தனுஷுக்கு வருத்தமாக இருந்த நிலையில், தற்போது இந்த படத்திற்கு சிக்கல் ஏற்பட்டிருப்பது அவருக்கு மகிழ்ச்சியை அளித்ததாகவும் கூறப்படுகிறது.