நடிகர் விஜய் படத்தில் நடிக்க..’சண்டை போடும்’ பிரபல நடிகை !

வெள்ளி, 15 நவம்பர் 2019 (19:05 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது அடுத்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு  விஜய் 64 என்ற பெயரில் ஹூட்டிங் நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சாந்தனு, விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் , மற்றும்  நடிகை ஆண்ட்ரியா ஆகியோர் நடுக்கின்றனர். எனவே தனது கதாப்பாத்திரத்துக்கு ஏற்ப, நடிகை ஆண்ட்ரியா  பல  தீவிர பயிற்சி எடுத்துவருவதாக செய்திகள் வெளியாகிறது.
 
அதிலும், இப்படத்தில் ஆண்டிரியாவுக்கு வேறெந்தப் படத்திலும் இல்லாத வகையில் புதுவகையான கதாப்பாத்திரமும், துணிச்சலான வேடமும்  உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, சண்டைக் காட்சிகளுக்காக நடிகை ஆண்டிரியா தீவிர பயிற்சி பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்