பிக்பாஸ் 3 போட்டியாளர்களின் தேர்வு தொடங்கியாச்சு! முதல் போட்டியாளரே இவங்க தான்!

வியாழன், 9 மே 2019 (10:45 IST)
கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ்.  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சி சீசன் 1 , சீசன் 2 , என்ற இரண்டு பாகமும் பட்டிதொட்டியெங்கும் பரவியது. இந்த நிலையில் நேற்று பிக்பாஸ் 3 சீசனுக்கான பணிகள் துவங்கியது. கமல் பங்குபெறும் ப்ரோமோ ஷூட் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. 


 
ரசிகர்களின் ஏகோபித்த வரவவேற்பை பெற்ற பிக் பாஸ் 3 சீசனும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. நேற்று இதற்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கிய நிலையில் வருகிற ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் தற்போது பிக்பாஸ் 3-வது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் போட்டியாளர் பற்றிய அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி நிகழ்ச்சியின் மீதான சுவாரஸ்யத்தை அதிகரித்துள்ளது. 


 
இந்நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக நடிகை சாந்தினி தமிழரசன் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.சாந்தினி தமிழரசன் தமிழில் வில் அம்பு, ராஜா ரங்குஸ்கி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தான் இவர் டான்ஸ் மாஸ்டர் நந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நம்பத்தகுந்த இடத்தில் இருந்து இந்த தகவல் கிடைத்தாலும் இதை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. 


 
மேலும் இந்த பிக் பாஸ் 3-வது சீசனில் பிரபல நடிகைகளான சுதா சந்திரன் ,லைலா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. கூடிய விரைவில் இதன் ப்ரோமோ வீடியோ வெளியிடப்படும் என்பது கூடுதல் தகவல்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்