சிம்புவின் பிரமாண்ட படவாய்ப்பை நாசமாக்கிய நயன்தாரா! இப்படி செய்யலாமா?

வியாழன், 9 மே 2019 (09:54 IST)
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களுள் ஒருவரான  சிம்பு நடிகை நயன்தாராவை பல வருடங்களுக்கு முன்பு காதலித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் அந்த காதல் பிரேக்அப் ஆகிவிட பின்னர் பிரபுதேவா என தொடங்கி முடிய தற்போது விக்னேஷ் சிவனுடன் லவ்தீக வாழ்வில் உச்சகட்ட மகிழ்ச்சியில் உலா வருகிறார் நயன். கூடிய விரைவில் விக்னேஷ் சிவன் உடனான காதல் நிச்சயதார்த்தம் வரை செல்லவிருக்கிறது. 
 



நயன்தாரா சில காலங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் நான் என் முதல் காதலரை கூட மன்னித்து விடுவேன் ஆனால் இரண்டாம் காதலை என் வாழ்நாளில் எப்போதும் மறக்கவும் மாட்டேன் மன்னிக்கவும் மாட்டேன் என கறாராக கூறியிருந்தார். 
 
அதற்கு ஏற்றவாறே அம்மணி நீண்ட வருடங்களுக்கு பின்னர் சிம்புடன் சேர்ந்து இது நம்ம ஆளு’ என்ற படத்தில் நடித்திருந்தார். அப்போது அவருக்கு "லேடி சூப்பர் ஸ்டார்" அந்தஸ்தெல்லாம் இல்லை.  ஆனால் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற மமதையில் சிம்புவுடன் சேர்ந்து நடிக்க நயன்தாரா மறுத்துள்ளராம். இதனால் பலரும் நயன்தாராவை கடிந்து வருகின்றனர். 
 
இந்நிலையில் பிரமாண்ட படமொன்றில் இருந்து சிம்பு விலகியதற்கு காரணம் நயன்தாரா தானாம். தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறந்த இயக்குனர்களில் ஒருவரான மணிரத்தினம் சுமார் ரூ 800 கோடியிலிருந்து ஆயிரம் கோடி செலவில் பொன்னியின் செல்வன் படத்தை பிரமாண்ட படைப்பாக இயக்குவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டிருக்கிறார்.  அந்த வகையில் இப்படத்தில் விஜய், விக்ரம், கார்த்தி, சிம்பு, ஜெயம் ரவி, சத்யராஜ், அமிதாப்பச்சன், ஐஸ்வர் யாராய், கீர்த்தி சுரேஷ்  என சிறந்த நட்சத்திரங்களை பொறுக்கியெடுத்து படத்தை பிரம்மாண்ட உருவாக்கவிருக்கிறார். 


 
இவர்களுடன் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவையும் இப்படத்தில் நடிக்க வைக்க மணிரத்னம் முயற்சித்தார் . ஆனால் நயன்தாரா, ‘சிம்பு இப்படத்தில் நடித்தால் நான் நடிக்க மாட்டேன்’ என்று கறாராக இயக்குனரிடம் கண்டீஷன்  போட்டாராம். இந்த தகவல் மணிரத்னம் தரப்பிலிருந்து சிம்புவுக்கு தெரியவர, நான் ஏன் அவருக்கு இடைஞ்சலாக இருக்கவேண்டும்? இப்படத்திலிருந்து நானே விலகிக்கொள்கிறேன் என்று கூறி சிம்பு ஜென்ட்டிலாக விலகி விட்டாராம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்