40 வயசு ஆகியும் இது தேவையா..? பூமிகாவின் போட்டோஷூட் அப்படி...

வியாழன், 21 பிப்ரவரி 2019 (20:40 IST)
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூமிகா. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியவர், இப்போது மீண்டும் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். 
 
யூ டர்ன் போன்ற படங்களில் குணச்தித்ர வேடங்களில் நடித்தவர் தற்போது ஹீரோயின் கதையம்சம் கொண்ட கதைகளை கேட்டு வருகிறாராம். இதற்காக உடல் எடையை குறைத்தும் உள்ளாராம். 
 
இதோடு, லேட்டஸ்ட்டாக எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 
இதை கண்ட பலர் அவரை பாராட்டி வரவேற்றாலும், சிலர் 40 வயதில் இதெல்லாம் தேவையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். பூமிகா, நயன்தாராவுடன் கொலையுதிர் காலம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்