தமிழ் சினிமா உருவாக்கிய சாக்லேட் பாய் ஹீரோக்களில் முக்கியமானவர் அரவிந்த் சுவாமி. 90 களில் பெண்களின் விருப்பமான நடிகராக இருந்த அவர் நடித்த வெற்றிப் பெற்ற படங்கள் விரல் விட்டு எண்ணக்கூடியவைதான். ஆனாலும் அவருக்கு இன்னமும் க்ரேஸ் இருக்கிறது. சமீபத்தில் அவர் தனி ஒருவன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்து வில்லன், குணச்சித்திரம் மற்றும் கதாநாயகன் என கலந்து கட்டி அடித்து வருகிறார்.
இந்நிலையில் அரவிந்த் சுவாமி பிரபலமான கதாநாயகனாக நடித்து வந்த போது கமலின் தெனாலி படத்தில் ஜெயராம் கதாபாத்திரத்திலும், அன்பே சிவம் படத்தில் மாதவன் கதாபாத்திரத்திலும் நடிக்க அழைப்பு வந்தும் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம். பின்னர் அந்த இரண்டு கதாபாத்திரங்களுமே மக்கள் மனதில் இடம்பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.